rajani

தாய், தந்தை கடவுள் காலில் மட்டுமே விழ வேண்டும் என்கிறார் றஜனி


சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி,

ரசிகர்களை தன் காலில் விழ வேண்டாம் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. நாம் மூன்று பேர் காலில் தான் விழ வேண்டும். நமக்கு உயிர் கொடுத்த கடவுள், உடல் கொடுத்து உயிர்பித்த தாய், தந்தை ஆகிய மூன்று பேரின் காலில் மட்டுமே விழ வேண்டும்.

அடுத்ததாக பெரியவர்களின் காலில் விழ வேண்டும். அது எதற்காகவென்றால், வாழ்க்கை என்கிற பாதை கஷ்டங்கள், துன்பங்கள், சோகங்கள், சோதனைகள் நிறைந்தது. அந்த பாதையை கடந்து வந்தவர்கள் பெரியவர்கள். நாமும் அதில் நடந்து வரப் போகிறோம். எனவே அவர்கள் காலில் விழ வேண்டும். மற்றபடி பணம், புகழ், அதிகாரம் உள்ளவர்கள் கால்களில் விழ அவசியம் இல்லை என்றார்.