stop

பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்த அமெரிக்கா முடிவு


பயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்காததால், பாகிஸ்தான் மீது அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்கா, அந்நாட்டுக்கு ஆண்டு தோறும் வழங்கும் நிதியுதவியை நிறுத்தி வைக்க, ஆலோசித்து வருகிறது.

அமெரிக்க அதிபராக, டிரம்ப் பதவியேற்றதிலிருந்தே, ‘பயங்கரவாதத்தை ஒடுக்க, பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, வலியுறுத்தி வருகிறார். பாகிஸ்தான், வழக்கம் போல், இந்த விவகாரத்தில் அலட்சியமாகவே நடந்து வருகிறது.இதனால் அதிருப்தியடைந்த டிரம்ப், சமீபத்தில், ‘பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளின் புகலிடமாக, பாகிஸ்தான், உள்ளது’ என, குற்றம்சாட்டினார்; இதற்கு பாக்., கண்டனம் தெரிவித்தது. இதனால், அமெரிக்கா – பாகிஸ்தான்., உறவில், பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா, ஒவ்வொரு ஆண்டும், இரண்டு லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அளித்து வருகிறது. ஆனால், பயங்கரவாதத்தை ஒடுக்க, நடவடிக்கை எடுக்க தவறியதால், பாகிஸ்தானுக்கு, இந்த ஆண்டுக்கான நிதியில், குறிப்பிட்ட ஒரு தொகையை நிறுத்தி வைக்க, அமெரிக்க ஆலோசித்து வருவதாக தகவல்வெளியாகியுள்ளது.

‘பயங்கரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்காதவரை, பாகிஸ்தானுக்கு இந்த நிதியை வழங்க வேண்டாம்’ என, அதிபர் டிரம்ப் கூறியுள்ளதாக, வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. இது பற்றிய இறுதி முடிவு, வரும் வாரங்களில் எடுக்கப்படவுள்ளதாக, அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..