ajith

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் இணையும் வாய்ப்பு யாருக்கு?


கடந்த வருடத்தில் அஜித் ‘விவேகம்’ படத்திலும் விஜய் ‘பைரவா, மெர்சல்’ ஆகிய இரண்டு படங்களிலும் நடித்திருந்தனர். இந்த வருடத்தில் இவர்கள் இருவரும் நடித்து ஒரு படம் மட்டுமேதான் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், படத்தின் இசையமைப்பாளர் யார், படத்தின் நாயகி யார் என்பது குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ‘விஸ்வாசம்’ படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கலாம் என்ற தகவல் வெளியானது. ஆனால், அது உறுதி செய்யப்படாமலேயே இருந்தது. தற்போது கிடைத்துள்ள தகவல்படி யுவன், ‘விஸ்வாசம்’ படத்திற்கு இசையமைக்கவில்லை எனத் தெரிகிறது. அதனால், இயக்குனர் சிவா மீண்டும் அனிருத் பக்கம் போவாரா அல்லது வளர்ந்து வரும் இசையமைப்பாளர் யாருக்காவது வாய்ப்பு கொடுப்பாரா என்பது தெரியவில்லை.

இதனிடையே, விஜய் நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள். விரைவில் அது பற்றிய அறிவிப்பும், படத்தின் நாயகி யார் என்பது பற்றியும் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மாதக் கடைசியில் அல்லது அடுத்த மாதம் ஆரம்பமாகும் என்கிறார்கள்.

அஜித், விஜய் இருவரது படமும் ஒருசேர படப்பிடிப்பு ஆரம்பமாகி, தீபாவளி சமயத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.