no english

ஈரானில் ஆங்கிலம் கற்க தடை


ஈரானில் ஆரம்பக் கல்வியில் பிற மொழிகளை உட்புகுத்துவது கலாசார ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் என்று இஸ்லாமிய மத தலைவர்கள் எச்சரிக்கை விடுத்ததையடுத்து ஆங்கிலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் கல்வி அதிகாரி கூறும்போது, ”அரசு மற்றும் தனியார் ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிப்பது விதிக்களுக்கு முரணானது” என்றார்.

ஈரானைப் பொறுத்தவரை 12 வயதைக் கடந்த மாணவர்களுக்குதான் பள்ளிகளில் ஆங்கில மொழிப் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக 2016-ம் ஆண்டில், ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா கொமேனி பிற கலாசார ஆக்கிரமிப்புக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.