ronald trumpt

நான் இனவெறியன் அல்ல – டொனால்ட் டிரம்ப்


ஆபிரிக்க அகதிகள் குறித்து இழிவாக கருத்துக் கூறியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ”நான் இனவெறியன் அல்ல,” என, அமெரிக்க அதிபர், டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

ஆபிரிக்க அகதிகள் குறித்து, சமீபத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தின் போது, ஆபிரிக்கர்கள் குறித்து இழிவான கருத்துக்களை, அமெரிக்க அதிபர், டிரம்ப் வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகின.

இது, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ‘டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, ஆபிரிக்க நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அமெரிக்க, எம்பி.,க்கள் பலரும், டிரம்ப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இது குறித்து, டிரம்ப் கூறுகையில், ”நான் இனவெறியன் அல்ல. ஆய்வுக் கூட்டத்தின் போது பங்கேற்ற, எம்.பி.,க்கள் அனைவரிடமும் கேளுங்கள். நான் அவ்வாறு எந்தக் கருத்தையும் கூறவில்லை,” என்றார்.