Vijay-in-Mersal-1

இங்கிலாந்தின் தேசிய விருதுப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் நடிகர் விஜய்


இங்கிலாந்தில் நடைபெற உள்ள தேசிய திரைப்பட அக்கடமி விருது வழங்கும் விழாவில் சிறந்த துணை நடிகர் விருதுக்கு, பல்வேறு போட்டியாளர்களின் மத்தியில் ‘மெர்சல்’ பட கதாநாயகன் நடிகர் விஜயின் பெயரும் இடம்பிடித்துள்ளது.

அதே சமயம், சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான பட்டியலிலும் மெர்சல் படம் இடம்பிடித்துள்ளது. இதனை இங்கிலாந்தின் National Film Awards தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதில் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் ‘மெர்சல்’ படத்துடன் பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, ஸ்வீடன், சிலி, தென்னாப்பிரிக்கா, லெபனான் போன்ற நாடுகளின் படங்கள் பங்கேற்கின்றன.

இதற்கான ஒன்லைன் வாக்கு பதிவுகள் ஆரம்பித்துள்ள நிலையில் 20-ம் திகதி வரை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களின் விவரம் மார்ச் மாதம் 28-ம் திகதி நடைபெற உள்ள விருது விழாவில் அறிவிக்க உள்ளனர்.