thanush

இளையராஜாவின் ஆசியுடன் மாரி 2 இல் களமிறங்கும் தனுஷ்


தனுஷ் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த ஹிட்டான படம் மாரி. இந்நிலையில் சமீபத்தில் தான் மாரி 2 படத்திற்கான பூஜை போடப்பட்டது.

முதல் பாகத்தை இயக்கிய அதே பாலாஜி மோகன் குழு தான் இரண்டாம் பாகத்தையும் எடுக்கவுள்ளது.

ஒரே ஒரு முக்கிய மாற்றம் மட்டும் தான் மாரி 2 வில் இடம்பெறுகிறது. அனிருத்துக்கு பதிலாக இரண்டாம் பாகத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கவுள்ளார்.

நேற்று தனுஷ் மற்றும் பாலாஜி மோகன் இளையராஜாவை சந்தித்து ஆசிபெற்று, அவரது குரலில் முதல் பாடலை பதிவுசெய்து மாரி 2 படத்திற்கான பாடல் காம்போஸிங் ஆரம்பிக்கப்பட்டது.