soorya

நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு அறிவுரை!


பயனுள்ள செயல்களுக்கு நேரத்தையும், சக்தியையும் செலவிடுங்கள்எ ன, நடிகர் சூர்யா, தன் ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

பிரபல, ‘டிவி’யின் தொகுப்பாளினிகள், நடிகர் சூர்யாவின் உயரத்தை கிண்டலடித்து விமர்சித்தனர். இதைக்கண்டித்து, சூர்யா ரசிகர்கள், நேற்று, சென்னையில் உள்ள, ‘டிவி’ அலுவலகம் முன் கூடி, முற்றுகை போராட்டம் நடத்தினர். ‘தொகுப்பாளினிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, போர்க்கொடி உயர்த்தினர்.

‘நகைச்சுவை என்ற பெயரில், சிலர் செய்யும் செயல் மிகவும் கீழ்தரமாக உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், கடிதம் அனுப்பபடும்’ என, நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர், ஞானவேல்ராஜா, ‘விமர்சித்தவர்கள், மனநல சிகிச்சை தர வேண்டியவர்கள்; கண்ணாடி முன் நின்று, நீங்களே துப்பிக் கொள்ளுங்கள்’ என, காட்டமாக தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளார்.

இந்நிலையில், சூர்யா, தன் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். இது குறித்து, தன், டுவிட்டர் பக்கத்தில், ‘தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி, நம் தரத்தை, நாமே குறைத்துக் கொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும், சமூகம் பயன்பெற, பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள்’ என, தெரிவித்துள்ளார்.