technology

சுவருக்குள் இருக்கும் மின்கடத்திகளைக் கண்டறியும் புதிய கருவி!


சுவர்களுக்குள் உள்ள குழாய்கள், மின்கடத்திகள் என்பவற்றை, ஸ்மார்ட் போன்களுடன் இணைத்து வைத்துக்கொண்டு கண்டறியும் புதிய கருவியை இஸ்ரேல் நாட்டினைச் சேர்ந்த வையார் (Vayyaar) என்ற, நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தக் கருவியானது சுவர்களின் பின்புறம் சுமார் நான்கு அங்குலம் (inch) தொலைவிலுள்ள மின்கடத்திகள் மற்றும் குழாய்களை, ஸ்மார்ட் போன்களுடன் இணைத்துக்கொண்டு, அவற்றைக் கண்டறிந்து தகவல்களைப் பதிவிட உதவியாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தப் புதுமையான கருவியானது வீட்டில் சுவர் எழுப்பிய பின்னர் மின்கடத்திகள் அல்லது குழாய்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டாலும் அதனைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இக் கருவியானது புதைபொருட்களைக் கண்டறிவதற்கும் பயன்படும் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.