Sivakarthikeyan1

மீண்டும் நயன்தாராவுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன்


இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புதிய படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக, நயன்தாரா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல சாதனை படைத்தது.

இதனையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் கதாநாயகியாக தன்னுடையா காதலி நயன்தாராவை நடிக்க வைக்க அவர் முடிவு செய்துள்ளாராம். முன்னதாக விக்னேஷ் இயக்கத்தில் ‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும்பொழுது தான் இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வேலைக்காரன் வெற்றியை அடுத்து, தற்போது பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதையடுத்து, இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இவ்விரு படங்களுக்கு பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.