un

உலகளாவிய ரீதியில் ஆண்களை விட கூடுதலாக உழைப்பது பெண்களே – ஐ.நா தகவல்!


உலக அளவில் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் அதிக பணிச்சுமை உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை புள்ளி விவரம் ஒன்று வெளியிட்டுள்ளது.

மேலும் ஆண்களுடன் ஒப்பிடுகையில் இரண்டரை மடங்கு வரை பெண்கள் வீட்டுவேலைகள் கூடுதலாக உள்ளது என அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 5:09 என்ற விகிதத்தில் பெண்கள் ஊதிய பணிகளில் உள்ளதாகவும் 4:11 என்ற விகிதத்தில் பெண்கள் ஊதியமற்ற இதர வேலைகள் புரிவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதேபோல் அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகளில் 4:39 என்ற விகித அளவில் பெண்கள் ஊதியப் பணியாற்றுவதாகவும் 3:30 என்ற அளவில் ஊதியமில்லா கூடுதல் பணிகளை கவனிப்பதாகவும் அந்த ஆய்வு தகவல் கூறுகிறது.

மேலும் ஆண், பெண் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான காலம் இது என்றும் ஐநா ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.