dogs strike

ஐ.நா தலைமையகம் முன் உரிமைக்காக நாய்கள் போராட்டம்!


விலங்குகளின் உரிமைக்காக ஐ.நா தலைமையகம் முன்பு நாய்கள் போராட்டம் நடத்திய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பல்வேறு பரிசோதனைகளுக்காகவும் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புக்களுக்காகவும் விலங்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்புக்களில் விலங்குகளிலே முதலாவதாக பரிசோதிக்கப்படுகிறது. இவ்வாறு விலங்குகளை ஆய்வுக்கூடங்களில் பரிசோதனைக்காக பயன்படுத்தி வதைப்பதை தடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அவ்வகையில் சர்வதேச விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான குரூவல்டி ப்ரி இன்டர்நசனல் அமைப்பும், பிரபல அழகு சாதன நிறுவனமான தி பாடி சொப் நிறுவனமும் இணைந்து விலங்குகள் பரிசோதனைக்கு எதிராக பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தப்பட்டது. அதுவும், விலங்குகளின் உரிமைக்காக விலங்குகளே போராட்டம் நடத்தின.

நியுயோர்க்கில் உள்ள ஜ.நா தலைமையகத்திற்கு முன் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த நன்கு பயிற்சியளிக்கப்பட்ட 8 நாய்களை கொண்டு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப் போராட்டத்தில் நாய்களின் கழுத்தில் விலங்குகள் பரிசோதனைக்கு எதிரான பதாகைகளும் தொங்க விடப்பட்டுள்ளன.

 

மேலும் ஒரு வருடத்திற்கு 2 லட்சம் விலங்குகள் பரிசோதனையால் பாதிக்கப்படுவதாகவும், அவற்றில் பெரும்பாலான விலங்குகள் எதிர்விளைவுகளின் காரணமாக இறந்துவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.