amala

நடிகை அமலாபால் கைது!


பிரபல நடிகை அமலாபால் இந்திய புதுச்சேரியில் போலி ஆவணங்கள் சமர்பித்து சொகுசு காரை பதிவு செய்து, 20 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து அமலாபால் மீது குற்றப்பிரிவு பொலிஸார் பிணையில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து நடிகை அமலாபால் முன்பிணை கோரி உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்நிலையில் இந்திய கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் சரணடையுமாறு அமலாபாலுக்கு கடிதம்அனுப்பப்பட்டது.

நேற்று மாலை குற்றப்பிரிவு அலுவலகத்தில் சரணடைந்த அமலாபாலை கைது செய்த பொலிஸார் பின்னர் அவரை பிணையில் விடுவித்தனர்.