broono

அமெரிக்க பொப் பாடகர் புருனோ மார்சுக்கு 6 கிராமி விருதுகள்!


அமெரிக்காவில் இசைத் துறையில் வழங்கப்படும் உயரிய கிராமி விருதுகள் வழங்கபட்டன. இதில் அமெரிக்க பொப் பாடகர் புருனோ மார்ஸ் 6 கிராமிய விருதுகளை பெற்றுள்ளார்.அவர் இசை அமைத்து எழுதி பாடிய ’24 மேஜிக்’ எனும் பாடல் 2018ம் ஆண்டின் சிறந்த பாடலாகத் தேர்வு பெற்றது.

கடந்த 1959-ம் ஆண்டில் இருந்து அமெரிக்க இசைத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு கிராமி விருதுகள் வழங்கப்படுகிறது. 2018-ம் ஆண்டு, 60-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மேடிசன் அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது.

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் மட்டுமே நடந்து வந்த கிராமி விருதுகள் வழங்கும் விழா முதல் முறையாக நியூயோர்க் நகரில் இந்த முறை நடத்தப்பட்டது.

விழாவுக்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற பொப் இசை கலைஞர்கள், பாடகர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை ஜேம்ஸ் கார்டன் தொகுத்து வழங்கினார். அமெரிக்காவின் பொப் பாடகர் புருனோ மார்ஸ்க்கு 6 கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டன. அவர் 7 பிரிவுகளுக்கு விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட நிலையில், 6 விருதுகளைப் பெற்றார். அவர் இசை அமைத்து பாடிய ’24 கே மேஜிக்’ எனும் அல்பம் பாடல் 2018ம் ஆண்டின் சிறந்த பாடலாகவும் தேர்வு செய்யப்பட்டது.

32 வயதான மார்க்ஸுக்கு சிறந்த பாடகர், சிறந்த பாடல் ஆசிரியர் விருதும், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன.

இரண்டா-வதாக 5 கிராமி விருதுகளை கென்ட்ரிக் லாமர் பெற்றார். சிறந்த ராப் அல்பமாக கென்ட்ரிக்கின் “டாமன்” அல்பமும், சிறந்த ராப் பாடலாக “ஹம்பில்” பாடலும், சிறந்த ராப் பாடகராக “ஹம்பில்” அல்பத்தில் நடித்த கென்ட்ரிக் லாமரும் தேர்வாகினர். மேலும், சிறந்த இசை வீடியோக்கான விருதும், ஹம்பில் அல்பத்துக்காக கென்ட்ரிக் பெற்றார்.

எட் ஷீரன் இரு கிராமி விருதுகளைப் பெற்றார். அவரின் சிறந்த பொப் அல்பமாக “டிவைட்” அல்பமும், தனிப்பாடகராக, “ஷேப் ஒப் வியு“ அல்பத்தில் பாடியதற்காக எட் ஷீரனுக்கு விருதும் வழங்கப்பட்டது.

சிறந்த புதுமுக கலைஞருக்கான கிராமி விருது அலிசியா காராவுக்கு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியின் இடையே பொப் பாடகர்கள் லேடி காகா, சாம் ஸ்மித், பிங்க், லுாயிஸ் பான்சிஸின் இசை நிகழ்ச்சிகளும் நடந்தன. மேலும், எரிக் சர்ச், மாரின் மோரிஸ், பிரதர்ஸ் அஸ்போர்ன் ஆகியோரின் நிகழ்ச்சிகளும் நடந்தன.