sivakarthy

சூரியை கலாய்த்த சிவகார்த்திகேயன்; பதிலுக்கு நோஸ்கட் செய்த சூரி!!!!


நடிகர் சிவகார்த்திகேயனும் சூரியும் இணைத்து நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் ஆனது நாம் அறிந்ததே. இவர்கள் சினிமாவை தவிர்த்து நிஜ வாழ்க்கையிலும் அண்ணன்-தம்பியாக பழகி வருகிறார்கள்.

இது பலருக்கும் தெரிந்த விடயம் சமீபத்தில் கூட நடிகர் சூரி தனது உணவகத்தை சிவகர்த்திகேயனை அழைத்து திறந்து வைக்கும்படி செய்தார்.

இந்நிலையில் கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூரி கிராமத்து பாட்டிகளுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து டுவிட்டரில் பதிவு செய்தார்.

மேலும் என் செல்ல அப்பத்தாக்களுடன் ஒரு டுவிட் என அதில் பதிவிட்டிருந்தார். சூரியின் அப்பத்தா செல்ஃபியை பார்த்த சிவகார்த்திகேயனால் கலாய்க்காமல் இருக்க முடியவில்லை.

என்ன சூரி அண்ணே கூடப்படித்தவர்களுடன் செல்ஃபி யா என கேட்டு சூரியை சிவகார்த்திகேயன் கலாய்த்துள்ளார்.

அதற்கு சூரி கூடப்படித்தவர்கள் தான் ஆனால் என்னுடன் இல்லை. என் அப்பாவுடன் பங்காளி என சிவகார்த்திகேயனை நோஸ்கட் செய்யும் வகையில் பதில் டுவிட் கொடுத்துள்ளார் சூரி.