201706131505123875_Samantha-plan-to-movies-committment-at-3-months-for-Marriage_SECVPF

அரசியலில் களமிறங்குகிறாராம் சமந்தா!


சினிமா துறையில் உள்ளவர்கள் அரசியலில் களமிறங்குவது ஒன்றும் புதிய விஷயமல்ல. சமீபத்தில் ரஜினி, கமல், விஷால் உள்ளிட்டவர்கள் அரசியலில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது நடிகை சமந்தாவும் அரசியலில் குதிக்கவுள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

2019ல் தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. தெலுங்கானாவில் செகந்திராபாத் சட்டசபை தொகுதியில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி சார்பாக நடிகை சமந்தா போட்டியிடுவார் என தகவல் பரவிவருகிறது.

அந்த பகுதியில் கிறிஸ்த்தவர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதால் சமந்தாவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.