shoot

தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்ததால் பிரபல நடிகை சுட்டுக் கொலை!


பாகிஸ்தானில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மறுத்ததால், பிரபல நடிகை சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சம்புல் பாகிஸ்தானில், போலிவுட் என்றழைக்கப்படும், ‘பாஷ்டோ’ மொழி பேசும் சினிமாவில் நடித்து வந்தார். நடிப்பதுடன். நன்றாகவும் பாடவும் செய்வார்.

இந்நிலையில், ஒரு தனியார் மேடை நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி, சம்புலிடம் ஒருவர் கேட்டார்.’அந்த திகதியில் பங்கேற்க முடியாது’ என, சம்புல் மறுத்தார். பலமுறை வற்புறுத்தியும், நிகழ்ச்சிக்கு வர மறுத்ததால், நிகழ்ச்சி அமைப்பாளர் ஆத்திரமடைந்தார். இரண்டு பேரை தன்னுடன் அழைத்துக் கொண்டு, நேற்று முன்தினம் அவர், நடிகை சம்புல் வீட்டுக்கு வந்தார். அங்கு, வாக்குவாதம் முற்றியதை அடுத்து, ஆத்திரத்தில், துப்பாக்கியை எடுத்து, நடிகையை சுட்டார். இதில், சம்பவ இடத்திலேயே சம்புல் உயிரிழந்தார்.

நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மூன்று பேரை பொலிசார் தேடி வருகின்றனர்.