Ajith-and-Nayanthara

விஸ்வாசம் பட கதாநாயகி அறிவிப்பு!!


அஜித் – சிவா கூட்டணியில் உருவாகும் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக இணைய உள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித், இயக்குனர் சிவாவின் கூட்டணியில் விரைவில் உருவாகவிருக்கும் படம் விஸ்வாசம். இவர்களது கூட்டணியில் உருவான `வீரம்’, `வேதாளம்’, `விவேகம்’ போன்ற 3 படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து இந்த கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படத்திற்கு செண்டிமெண்டாக, விஸ்வாசம் என படக்குழுவினர் தலைப்பு வைத்துள்ளனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பானது தொடங்கவுள்ளது.

நீண்ட நாட்களாக படத்தில் அஜித்திற்கு ஜோடியாக யார் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்தது. இந்நிலையில் நடிகை நயன்தாரா விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக, படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக அஜித் – நயன்தாரா இணைந்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’ போன்ற படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.