thrisha

திரிஷா நடித்தால் நான் நடிக்கமாட்டேன் – கீர்த்தி சுரேஷ்!


இயக்குனர் ஹரி இயக்கத்தில் பிரபல நடிகர் விக்ரம் மற்றும் நடிகை திரிஷா நடித்து 2003 ஆம் ஆண்டு வெளியான படம் சாமி. இந்த படம் மிக பெரிய ஹிட் கொடுத்து மக்கள் மனதில் அழியாது நின்றது. அதனால் சாமி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்ட இயக்குனர் ஹரி. திரிஷா, விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரிடம் கேட்க, ஆரம்பத்தில் அனைவரும் சம்மதிக்க பட வேலைகளை ஆரம்பித்தார் ஹரி.

கதையை கேட்ட திரிஷா அவருக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை என்று படத்தில் நடிக்க மறுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் தற்போது திரிஷா மறுக்க காரணம் கீர்த்தி சுரேஷ் தான் என்று சில செய்திகள் பரவி வருகிறது. முதலில் இயக்குனர் திரிஷாவிற்கு தான் அதிக காட்சிகள் அமைத்திருந்தாராம். நடிகை கீர்த்தி திரிஷாவிற்கு அதிக காட்சிகள் என்றால் நடிக்க மாட்டேன் என்று கூற. பிறகு தான் திரிஷாவின் காட்சிகளை குறைத்துள்ளார்களாம்.

இந்த விஷயத்தை கேள்விபட்ட நடிகை கீர்த்தி, நான் அப்படி எல்லாம் சொல்லவில்லை என்றும், நடிகை திரிஷாவின் கதாபாத்திரம் குறித்து கூட தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். எது உண்மை என்று தெரியவில்லை. படத்தின் படப்பிடிப்பை திரிஷா இல்லாத காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் ஹரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஜூன் 14 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகைக்காக வெளியிடப்படவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.