deportation

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவரை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு!


அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய தமிழர் ஒருவரை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெல்போர்னில் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

தமிழ் அகதிகள் சபையினால் கடந்த 11 ஆம் திகதி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சாந்தரூபன் என்ற தமிழீழ விடுடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு, சாந்தரூபனின் வழக்கை கருத்திற்கொண்டுள்ளதாக குறித்த போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சாந்தரூபனை எதிர்வரும் 22 ஆம் திகதி நாடுகடத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாந்தரூபனுடன் மேலும் பல தமிழர்கள் நாடுகடத்தப்படக்கூடும் என தமிழ் அகதிகள் சபையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நுழைவு விசைவுகள் மறுக்கப்பட்ட நிலையில், ஆயிரத்து 400 தமிழர்கள் தற்போது நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளனர். சில தமிழர்கள் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ளதாக பேரணியில் கலந்துகொண்ட தமிழ் ஆதரவு பெண் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்காலிக பாதுகாப்பு நுழைவு விசாவில் 2 ஆயிரம் தமிழர்கள் மெல்போர்னில் தற்போது உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.