australia1

கோவில் புனரமைப்பிற்கு அவுஸ்திரேலிய அரசு நன்கொடை!!


அவுஸ்திரேலியாவில், இந்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2016 மக்கள் தொகை கணக்கின்படி, 4.40 லட்சம் இந்துக்கள் உள்ளனர்.

மெல்போர்ன் நகரில், 1994ல் கட்டப்பட்ட சிவா விஷ்ணு கோவில், கலாசார மற்றும் பாரம்பரிய மையமாகவும் செயல்படுகிறது. இந்த கோவிலை மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

கோவிலுக்கு நேற்று வந்த, விக்டோரியா மாகாணத்தின், பல்வேறு கலாசார விவகாரத்துக்கான அமைச்சர், ராபின் ஸ்காட், கோவில் புனரமைப்புக்காக, மாகாண அரசு, ஒரு கோடி ரூபாய் அளிப்பதாக அறிவித்தார்.