ramcharan

கிராமத்து கதாபாத்திரத்தில் ராம்சரணுடன் சமந்தா!!!


தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் ராம்சரண்-சமந்தா நடித்துள்ள படம் ரங்கஸ்தலம். 1885ல் நடக்கும் கதையில் இந்த படம் தயாராகி வருகிறது. பக்கா கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்காக ராம்சரண்-சமந்தா இருவருமே தங்களை கிராமத்து கதாபாத்திரங்களாக முழுமையாக மாற்றிக்கொண்டு நடித்துள்ளனர்.

மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியிருக்கிறது. அதோடு, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, கெளதமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். மார்ச் 30-ந் திகதி இப்படம் திரைக்கு வருகிறது.

 

இதுவரை ரொமான்டிக், ஆக்சன் காட்சிகளாக அதிகம் நடித்துள்ள ராம்சரண் தேஜா, இந்த படத்தில் காமெடி கலந்த வேடத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, நானும் ரெளடிதான் படத்தில் காது கேளாத பெண்ணாக நயன்தாரா நடித்தது போன்று இந்த படத்தில் ராம் சரண் காது கேளாதவராக நடித்துள்ளார். அவரது காமெடி காட்சிகள் காமிக் ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.