robo

ஒருவருக்கொருவர் உதவிசெய்யும் ரோபோ நண்பர்கள்!


‘ரோபோ’ உலகில் முன்னோடியான பாஸ்டன் டைனமிக்ஸ், நான்கு கால்கள் கொண்ட, ‘ஸ்பாட் மினி’ ரோபோவை, 2016ல் அறிமுகப்படுத்தியது.

ஜப்பானின், ‘சாப்ட் பேங்க்’ கூகுளிடமிருந்து விலைக்கு வாங்கிய அமெரிக்க ரோபோ நிறுவனமான பாஸ்டன் டைனமிக்ஸ், தற்போது, தன் ஸ்பாட் மினியின் அடுத்த பதிப்பை வெளியிட்டுள்ளது.

புதிய வடிவமைப்பு சற்று அழகாகவே இருக்கிறது. இதன் அறிமுகக் காணொளியில், ஒரு ஸ்பாட் மினி நான்கு காலில், ‘சலிங் சலிங்’ என்று நடந்து வருகிறது.

கதவு மூடியிருப்பதைப் பார்த்துவிட்டு, திரும்பச் செல்கிறது. உடனே, தலைக்கு மேல் ரோபோ கரம் கொண்ட இன்னொரு ஸ்பாட் மினி, நான்கு காலில் நடந்து வந்து, கதவை திறந்து பிடித்துக் கொள்கிறது.

தயங்கி நின்ற ரோபோ, நடந்து, கதவு வழியே வெளியேறுகிறது. பின்னாலேயே கதவை சாத்திவிட்டு அந்த ஸ்பாட் மினியும் வெளியேறுகிறது.

இணையத்தில் வைரலாகி வரும் இந்த காணொளி, ரோபோவியலில் முக்கியமான மைல் கல் என்கின்றனர் வல்லுனர்கள்.