oviya-1

எதிர்கால கணவன் குறித்து ஓவியா!!


என்னை திருமணம் செய்யப்போகும் நபருக்கு பெண்களை எவ்வாறு நடத்தவேண்டும் மற்றும் பெண்களை மதிப்பது குறித்து அறிந்திருக்க வேண்டும் என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிக அளவில் பேசப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது பிரபல தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களை ஒன்றிணைத்து ஒரே வீட்டில் வைத்து அவர்களின் வாழ்வை அப்படியே மக்களுக்கு ஒளிபரப்பு செய்தார்கள். அந்த வகையில், நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. சில பிரபலங்கள் செய்த நியாயமற்ற செயல்களால் அந்த பிரபலங்கள் மட்டும் மக்களின் வெறுப்பை சம்பாரித்தார்கள்.

மேலும், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனைவரும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்கள். அதில் நடிகை ஓவியா பெரிய அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். இவர் என்ன செய்தாலும் இவரை புகழ்ந்து பேச பல பேர் இருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நிறைய விளம்பரங்கள், படங்கள் என ஒப்பந்தமானார்.

இந்த நிலையில் அவரிடம் திரைவாழ்க்கை மற்றும் நிஜவாழ்க்கை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, எனக்கு படத்தின் வெற்றி தோல்வி முக்கியம் இல்லை. என்னால் முடிந்த 100 சதவீதம் நான் கொடுப்பேன் அவ்வளவு தான். மேலும் வாழ்க்கை என்றால், என்னை திருமணம் செய்யப்போகும் நபருக்கு பெண்களை எவ்வாறு நடத்தவேண்டும் மற்றும் பெண்களை மதிப்பது குறித்து அறிந்திருக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.