ajith

மீண்டும் அஜித்துடன் அர்ஜூன்!


அஜித்தின் 50வது படமான மங்காத்தா பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இந்தப்படத்தில் அஜித்துடன், அர்ஜூன் முக்கிய ரோலில் நடித்தார். இவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளனர்.

சிவா இயக்கத்தில், அஜித் நான்காவது முறையாக இணையும் விசுவாசம் படத்தில் அர்ஜூனும் முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாகவும், அனேகமாக அவர் வில்லனாக நடிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

விசுவாசம் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். முதன்முறையாக இமான் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கிறார். அடுத்தமாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது.