samantha-

நடிகை சமந்தாவின் நிலையை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில்..!


தெலுங்கு திரையுலகின் பிரபல ஹீரோ நாக சைத்தாயாவிற்கும், நடிகை சமந்தாவிற்கும் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது. இவர்களில் திருமணத்திற்கு 175 பேருக்கு மட்டும் அழைப்பு விடுத்து, 10 கோடி அளவில் செலவழித்து திருமணத்தை நடத்தினார் நாக அர்ஜுனா.

திருமணத்தை தொடர்ந்து தேனிலவிற்காக இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளுக்கு சென்றனர். அதைத்தொடர்ந்து, பல படங்களில் ஒப்பந்தமாகி சமந்தா நடித்துவருகிறார். இந்த வருடத்தில் அவரது நான்கு படங்கள் வெளியாகவுள்ளது. இரும்புத்திரை, சூப்பர் டீலக்ஸ், மகாநதி, யுடர்ன் (தமிழ் ரீமேக்) ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும், அண்மையில் சமந்தாவை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளார்கள். ஏன்னெனில் சமந்தா நீளமாக இருந்த கூந்தலை வெட்டி சிறிதாக்கிவிட்டாராம். இந்த ஹேர் ஸ்டைல் அவருக்கு பொருத்தமாக இல்லையாம். இதனால் அவரை பார்த்த அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகிவிட்டார்கள்.