aarya.

ஆர்யாவுக்காக இந்தியா சென்ற இலங்கைப் பெண்!


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் கனடா வாழ் இலங்கைப் பெண் சுசானா.

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலே முதல் முறையாக நடைபெறும் நிகழ்ச்சி “எங்க வீட்டு மாப்பிள்ளை” இதில் நடிகர் ஆர்யா நிகழ்ச்சியில் பங்கேற்கும் 16 பெண்களில் தனக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

நடிகை சங்கீதா கிரிஸ் தொகுத்து வழங்கும் இந் நிகழ்ச்சியில் கனடாவில் வசிக்கும் இலங்கைப் பெண் சுசானா பங்கேற்றுள்ளார்.

சுவிட்சர்லாந்தை பிறப்பிடமாகக் கொண்ட சுசாசனா, கடந்த மூன்று ஆண்டுகளாக கனடாவில் வசித்து வருகிறார். இவரது பூர்விகம் இலங்கை என்பதும். கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.