Simran- (5)

சிவகார்த்திகேயனை மிரட்டும் சிம்ரன்!!


மும்பையில் இருந்து வந்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக கோலிவுட்டை கலக்கியவர் சிம்ரன். திருமணத்திற்கு பிறகு ரம்யாகிருஷ்ணன், ஜோதிகா, மீனா என சில நடிகைகள் தொடர்ந்து நடித்து வரும் நிலையில், சிம்ரனும் அவ்வப்போது சில படங்களில் நடிக்கிறார்.

தற்போது, அரவிந்த்சாமி நடித்து வரும் வணங்காமுடி படத்தில் ஒரு போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார்.

அதையடுத்து, பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படத்தில் கிராமத்து வில்லியாக நடித்து வருகிறார் சிம்ரன். சிவகார்த்திகேயனையே சில காட்சிகளில் தனது வில்லத்தனமான நடிப்பால் மிரட்டுகிறாராம் சிம்ரன்.

மேலும், இந்த சீமராஜாவில் பிரதானமான வேடம் என்பதால், இந்த படம் சிம்ரனுக்கு பிரகாசமான ரீ-என்ட்ரியை ஏற்படுத்திக்கொடுக்கும் என்கிறார்கள்.