Yothidam-1

இன்றைய ராசிபலன்


  • மேஷம்

    மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலை அமையும். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

  • கடகம்

    கடகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவேண்டிய நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. போராடி வெல்லும் நாள்.

  • கன்னி

    கன்னி: தவறு செய்பவர்களை திருத்த முயற்சி செய்வீர்கள்.  உங்கள் மனதிற்கு இனிமையான செய்தி ஒன்று வரும்.  பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

  • துலாம்

    துலாம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதிக்கும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

  • தனுசு

    தனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டியிருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

  • மகரம்

    மகரம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

  • மீனம்

    மீனம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். புதுமை படைக்கும் நாள்.